Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

ஆசிய கிண்ண மகளிர் ஹாக்கி: மலேசியா தோல்வி

09/09/2025 06:52 PM

செராஸ், 09 செப்டம்பர் (பெர்னாமா) - 2025-ஆம் ஆண்டு ஆசிய கிண்ண மகளிர் ஹாக்கி போட்டி.

நேற்றிரவு நடைபெற்ற A குழுவுக்கான ஆட்டத்தில் தென் கொரியாவுடன் மோதிய மலேசியா 0-5 என்ற கோல்களில் தோல்வி கண்டது.

சீனா, ஹொங்சாவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் துவக்க ஆட்டங்களில் மலேசியா சிறந்த அடைவுநிலையை பதிவு செய்து வந்தது.

இருப்பினும் நேற்றய ஆட்டம் தென் கொரியாவுக்கு சதாகமாகியது.

இந்த தோல்வியினால், மூன்று புள்ளிகளுடன் மலேசியா புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

9 புள்ளிகளுடன் சீனா முதல் இடத்திலும், 6 புள்ளிகளுடன் தென் கொரியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)