மெர்சிங், 13 செப்டம்பர் (பெர்னாமா) -- மலேசிய மடானி கொள்கை என்பது புதிய சிந்தனை அல்ல.
மாறாக, மனிதாபிமானப் பண்புகள், நீதி மற்றும் நல்லொழுக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு ஏற்ப, அக்கொள்கை நாட்டின் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுப்படுத்தினார்.
நுண்ணறிவு ஆகியவற்றைப் பின்தொடர்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், அதே நேரத்தில், பிற இனத்தவரை இழிவாகப் பார்ப்பது, வெறுப்புணர்வை விதைப்பது மற்றும் மனித நேயத்தின் அடிப்படையை மறந்து விடுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
''இந்த மடானி கொள்கையில், நான் வலியுறுத்துகிறேன். பொருளாதாரம் நீண்ட காலத்திற்கு நிலையானதாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழலை அழிக்காதீர்கள். நீங்கள் பணக்காரர்கள், நிறுவனம் லாபம் ஈட்டுகிறது. மிகக் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள். எங்களிடம் அதிகாரம் உள்ளது, அதனால் உங்கள் சந்ததியினருக்காக குத்தகைகளைப் பறிக்காதீர்கள்,'' என்றார் அவர்.
நல்லொழுக்கத்தை அழிப்பதற்குப் பதிலாக, மனித கண்ணியத்தை உயர்த்தும் பொருளாதார வலிமை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை வலியுறுத்துவதே மடானி கொள்கை என்றும் அன்வார் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)