லண்டன், 14 செப்டம்பர் (பெர்னாமா) -- பிரிட்டனில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிருத்தி, இங்கிலாந்து லண்டனில் நடத்தப்பட்ட பேரணியில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.
சட்டவிரோதக் குடியேறிகளுக்கு வழங்கப்படும் உரிமைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தினர்.
வலதுசாரி ஆதரவாளர் தோமி ரொபின்சன் ஏற்பாடு செய்த இப்பேரணியில் கணிக்கப்பட்டதை விட சுமார் ஒரு லட்சத்து 50,000 பேர் கலந்து கொண்டதாக லண்டன் போலீஸ் கூறியது.
தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் சில பங்கேற்பாளர்கள் நுழைய முயன்றபோது குழப்பம் ஏற்பட்டது.
அதனை தடுக்கும் பொருட்டு போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கையால் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், போலீஸ் அதிகாரிகள் 26 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
போலீஸ் அதிகாரிகள் மீதான தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூட் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அமைதியைச் சீர்குழைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் எச்சரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)