பான்னு, 14 செப்டம்பர் (பெர்னாமா) -- வடமேற்கு பாகிஸ்தானில் இராணுவ வாகனம் மீது கிளர்ச்சிப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 12 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
நேற்று மேற்கொள்ளப்பட்ட இராணுவ வாகனங்கங்களின் அணிவகுப்பின் போது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் கூறியிருக்கிறது.
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு வசிரிஸ்தான் எனும் பகுதியில் வீரர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
அதனை எதிர்கொள்ளும் பொருட்டு, இராணுவம் பதில் தாக்குதலை மேற்கொண்டது.
இதில், 12 இராணுவ வீரர்களும் 13 கிளர்ச்சிப் படையினரும் கொல்லப்பட்டனர்.
நால்வர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட இஸ்லாமிய கிளர்ச்சிப் படை ஒன்று இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)