Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

புதிய உருமாற்றத் தொற்று, XFG பரவுவதை, சுகாதார அமைச்சு அணுக்கமாக கண்காணிக்கும்

20/09/2025 06:06 PM

கோலாலம்பூர், 20 செப்டம்பர் (பெர்னாமா) - நாடு தற்போது முடிவில்லாத் தொற்று நிலையில் இருந்தாலும் கோவிட்-19 இன் புதிய உருமாற்றத் தொற்றான XFG பரவுவதை சுகாதார அமைச்சு தொடர்ந்து அணுக்கமாக கண்காணித்து வருகிறது.

Omicron-னின் துணை உருமாற்றுத் தொற்றான XFG, அதன் வீரியத்தின் அளவு அச்சுறுத்தும் வகையில் இல்லை என்றும், இதுவரை, ஒரே ஒரு மரணம் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர்  டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.

துணை உருமாற்றுத் தொற்றான XFG, 9.1 விழுக்காடு பதிவாகியிருக்கும் நிலையில், GM1 மற்றும் XEC தலா 17.4 விழுக்காடு மற்றும் 12.7 விழுக்காடு பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் சுல்கிஃப்ளி அத்தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

சுகாதார அமைச்சும் தேசிய அவசரக் காலத் தயார்நிலை மற்றும் பதிலளிப்பு
மையம், CPRC, எப்போதும் தயாராக இருப்பதாகவும் தற்போதைய சூழ்நிலையை தமது தரப்பு இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)