கோலாலம்பூர், 22 செப்டம்பர் (பெர்னாமா) - பொருளாதார மற்றும் அரசியல் பரிசீலனைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் நிலையான வளர்ச்சியை எட்டுதல், மீள்தன்மையை வலுப்படுத்துதல் மற்றும் அதன் உறுப்பு நாடுகளுக்கு நீண்டகால பாதுகாப்பு அரணாக விளங்குதல் போன்ற உத்திகளை ஆசியான் வகுக்க முடியும்.
எனவே, ஆசியான் புவிசார் பொருளாதார பணிக்குழு AGTF-பின் கண்டுபிடிப்புகளும் பரிந்துரைகளும் வட்டார அளவிலான கூட்டு பதிலை வடிவமைப்பதில் மிகவும் முக்கியமானவை என்று முதலீடு, வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சர், Tengku தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் வலியுறுத்தினார்.
ஆசியான், அமெரிக்க இடையிலான விவகாரங்களுக்கு இதன் மூலம் தீர்வு காண்பதோடு, பரந்த அளவிலான புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார முன்னுரிமைகளையும் அணுகும் முறையையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
AGTF இன் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகள் வரும் அக்டோபரில் நடைபெறவிருக்கும் 47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கு முன்னதாக நடைபெற உள்ள ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் ஆசியான் பொருளாதார அமைச்சர்கள் கூட்டங்களில் கூட்டாக முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படும் Tengku Zafrul கூறினார்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற ஐந்தாவது AGTF கூட்டத்தின் தொடக்க விழாவில் உரையாற்றிய தெங்கு சஃப்ருல் அவ்வாறு கூறினார்.
அனைத்துலக மலேசிய வர்த்தகம் மற்றும் கண்காட்சி மையமான MITEC-க்கில் செப்டம்பர் 22 முதல் 26 வரை நடைபெறும் இக்கூட்டம், 57-ஆவது ஆசியான் பொருளாதார அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)