பிரசெல்ஸ், 21 செப்டம்பர் (பெர்னாமா) -- பிரசெல்ஸ், பெர்லின் மற்றும் லண்டனில் உள்ள ஹீட்ரோ உள்ளிட்ட ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்களில், நேற்று இணைய தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான நிலையங்களின் டிக்கெட் பதிவு பகுதிகள் செயலிழந்ததால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு நீண்ட தாமதங்கள் ஏற்பட்டன.
அயர்லாந்தின் டப்லென் மற்றும் கொக் விமான நிலையங்களும் இந்தச் சிக்கலால் பாதிக்கப்பட்டன.
இருப்பினும், அதிகாரிகள் அதனை ஐரோப்பா முழுவதும் ஏற்பட்ட மென்பொருள் கோளாறின் சிறிய தாக்கம் என்று விளக்கள் அளித்துள்ளனர்.
இந்த இணைய தாக்குதால் பயணிகளின் பயண தகவல் தொடர்பில் தொழில்நுட்ப அமைப்பில் பெரிய கோளாறு ஏற்பட்டதாக விமானப் போக்குவரத்து கண்காணிப்பு நிறுவனம் Eurocontrol தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, பல விமான நிலைய சேவையில் இடையூறு ஏற்பட்டதாக அறிக்கை வெளியிட்டப்பட்டது.
இந்த சிக்கலை தீர்க்கவும், அமைப்பின் செயல்பாட்டை விரைவில் மீட்டெடுக்கவும் விமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)