சபா, ஜனவரி 09 (பெர்னாமா) -- கினபதாஙான் நாடாளுமன்றம் மற்றும் லமாங் சட்டமன்றம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம், எஸ்.பி.ஆர் மேற்கொண்டு வரும் ஏற்பாடுகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளன.
வேட்புமனு தாக்கலுக்கு மையமாகப் பயன்படுத்தப்படும் ஶ்ரீ லமாங் மண்டபத்தில், வேட்புமனு தாக்கல் செயல்முறையில் கவனம் செலுத்தப்படுவதாக, தேர்தல் நிர்வாக அதிகாரி டாக்டர் ஏடி ஷாய்சுல் ரிசாம் அப்துல்லா தெரிவித்தார்.
''நாளை நடைபெறும் வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கலை முடிந்தால், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுடன் ஒருங்கிணைப்போம். இதனால் நாளை வேட்புமனு தாக்கல் செயல்முறை பாதுகாப்பாகவும் சுமுகமாகவும் நடைபெறும்,'' என
டாக்டர் ஏடி ஷாய்சுல் ரிசாம் அப்துல்லா கூறினார்.
வெள்ளிக்கிழமை, கோத்தா கினபதாஙான், ஶ்ரீ லமாங் மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இறுதி கட்ட பணிகளை, டாக்டர் ஏடி பார்வையிட்டார்.
நாளை காலை மணி 9-க்குத் திறக்கப்படும் வேட்புமனு தாக்கல் மையம், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மூடப்படும்.
கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி, டத்தோ செரி புங் மொக்தார் ராடின் காலமானதை தொடர்ந்து, கினபதாஙான் நாடாளுமன்றம் மற்றும் லமாங் சட்டமன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)