சூடான், ஜனவரி 13 (பெர்னாமா) -- சூடானின் வடக்கு மாநிலத்தில் உள்ள மருத்துவர்கள் நோயாளிகளுக்கு தங்களுடைய இரத்தத்தையே தானமாக வழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அல் அஃபாத் முகாமில் உள்ள ஒரு சிகிச்சையகம் மற்றும் அல் டப்பா மகப்பேறு மருத்துவமனையில் அவசர மகப்பேறு சேவைகள் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிறுவனம் UNFPA குறிப்பிட்டுள்ளது.
சூடானில் நிலவும் போரை ஐக்கிய நாடுகள் சபை உலகின் மிக மோசமான மனிதநேய நெருக்கடியாக சுட்டிக்காட்டியுள்ளது.
இப்போரில் 40,000-க்கும் மேற்பட்டோர் பலியானதாக ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிவரம் காட்டுகின்றது.
ஆனால், உண்மையான எண்ணிக்கை இதைவிட மிக அதிகமாக இருக்கலாம் என்று உதவி குழுக்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பல பகுதிகளில் தொற்றுநோய்களும் பஞ்சமும் அதிகரிக்கும் நிலையில் ஒரு கோடியே 40 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)