Ad Banner
 பொது

வீடொன்றில் தீ விபத்து; 20 மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் சேதம் 

19/01/2026 01:35 PM

ஈப்போ, 19 ஜனவரி (பெர்னாமா) -- பேராக்கின் பாரிட் புந்தார், கம்போங் கெடாவில் உள்ள தித்தி செரோங், லோரோங் பாரிட்1 எனுமிடத்தில், வாகனங்கள் மற்றும் உபகரணங்களை சேமித்து வைக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்ட வீடொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 20 மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் சேதமடைந்தன. 

இச்சம்பவம் குறித்து பின்னிரவு மணி 1.50-க்கு தங்களுக்கு அழைப்பு கிடைத்ததாகவும் அதில், 20-க்கு 70 அடி பரப்பளவை கொண்ட அவ்வீடு ஏறத்தாழ 70 விழுக்காடு தீக்கிரையானதாகவும், மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேராக் மாநில செயல்பாட்டு உதவி நடப்பு இயக்குநர் ஷஸ்லின் முஹமட் ஹனாஃபியா தெரிவித்தார். 

அதிகாலை மணி 5.50-க்கு தீ முழுமையாக அணைக்கப்பட்ட வேளையில் இதில் எந்தவோர் உயிருடற்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]