Ad Banner
 உலகம்

கிரீன்லாந்து ஆக்கிரமிப்பு விவகாரம்; வரி விதிப்பினால் டிரம்புடன் டென்மார்க் பேச்சுவார்த்தை

19/01/2026 05:57 PM

லண்டன், 19 ஜனவரி (பெர்னாமா) -- டென்மார்க், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ தலைவர்களோடு மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடலுக்குப் பின்னர், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நேட்டோ நட்பு நாடுகளின் கூட்டுப் பாதுகாப்பைப் பெறும் பொருட்டு இதர நட்பு நாடுகள் மீது வரி விதிப்பது தவறு என்று தாம் நம்புவதாக அவர் டிரம்பிடம் தெரிவித்தார்.

டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஸ்டார்மர், பின்னர் டிரம்புடன் பேசினார். 

கிரீன்லாந்தை கையகப்படுத்துவதில் ஒத்துழைக்காத எட்டு நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்ததை அடுத்து இப்பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது. 

டென்மார்க், சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பின்லாந்து, பிரிட்டன் உட்பட நார்வே ஆகிய எட்டு நாடுகளும் ஏற்கனவே 10-இல் இருந்து 15 விழுக்காடு வரையிலான அமெரிக்க வரிகளுக்கு உட்பட்டவையாகும்.

இந்நிலையில், தன்னுடனான மோதல் அதிகரித்து வருவதால், டென்மார்க்கின் ஆர்க்டிக் தீவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான இராணுவ வீரர்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]