புத்ராஜெயா, ஜனவரி 20 (பெர்னாமா) -- உள்ளூர் மாணவர்களின் நிபுணத்துவத்தை முழுமையாகப் பயன்படுத்தி 2026-2035ஆம் ஆண்டுக்கான மலேசிய உயர்கல்வி திட்டத்தை வெற்றிகரமாக உருவாக்கியதன் மூலம் உயர்கல்வி அமைச்சு KPT வரலாறு படைத்துள்ளது.
அதிக செலவுகளை ஏற்படுத்தும் வெளிப்புற ஆலோசகர்களை நம்பி இருக்காமல் உள்ளூர் அறிஞர்களின் தரத்தில் அரசாங்கம் கொண்டிருக்கும் நம்பிக்கையை இந்த வெற்றி நிரூபித்திருப்பதாக உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர் கூறினார்.
8,000க்கும் மேற்பட்ட தரப்பினர்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டதாக இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டு புத்தாண்டு நிகழ்ச்சியில் உரையாற்றும்போது டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி கூறினார்.
தேசிய கொள்கைகளை வரைவதற்கு வெளிப்புற ஆலோசகர்களை நியமிக்க முன்னதாக அரசாங்கம் ஆயிரக்கணக்கான ரிங்கிட்டைச் செலவிட்ட காலம் தற்போது மாறிவிட்டதாக அவர் விவரித்தார்.
''இதை முதல்முறையாகச் செயல்படுத்துகின்றோம். உள்ளூர் மாணவர்களின் புத்திசாலித்தனம் ஞானத்தின் விளைவை நாங்கள் ஒன்றாக உருவாக்குகிறோம். நன்றி. 8,000க்கும் மேற்பட்ட பங்குதாரர்களை உள்ளடக்கியது. இதுவே அதன் பெரும்பகுதி'' என்றார் டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர்.
மற்றுமொரு நிலவரத்தில் உயர்கல்வி நிறுவனங்களில் முகவரியற்ற மொட்டைக் கடிதங்களை விநியோகிக்கும் நடைமுறை கலாச்சாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் டாக்டர் சம்ரி வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)