Ad Banner
 பொது

ஆறாம் படிவம் & மெட்ரிகுலேஷன் மாணவர்கள் இனி உயர்கல்வி மாணவர்களாக வகைப்படுத்தப்படுவர்

20/01/2026 05:38 PM

புத்ராஜெயா, 20 ஜனவரி (பெர்னாமா) -- ஆறாம் படிவம் மற்றும் மெட்ரிகுலேஷன் பயிலும் மாணவர்கள் தற்போது உயர்கல்வி மாணவர்களாக வகைப்படுத்தப்படுவதால், அவர்களின் கல்வி மேம்பாடும் அமைப்பும் உயர்கல்வி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படுகின்றது.

பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான இடங்களை அதிகரித்தல், திவெட்கல்வியை வலுப்படுத்துதல் மற்றும் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப போலிடெக்னிக் மற்றும் கல்லூரிகளை மேம்படுத்துவது என நாட்டின் உயர்கல்வியின் விரிவான மாற்றத்தின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை அமையும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

''ஆறாம் படிவ மாணவர்களும் மெட்ரிகுலேஷன் மாணவர்களுக்கும் இனி பள்ளி மாணவர்களாக வகைப்படுத்த மாட்டார்கள். அவர்கள் உயர்கல்வி தரத்திற்குள் நுழைந்து விட்டனர்'' என டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

பல்கலைக்கழகத்தில் நுழைவது, குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் குறைந்த தேர்வு கொண்ட படிப்பைத் தேர்வு செய்வதில் மாணவர்கள் வழங்கும் புகார்களை அரசாங்கம் கருத்தில் கொள்வதாக, அவர் கூறினார்.

மேலும், பொது பல்கலைக்கழகங்களில் இவ்வாண்டு 3,000 புதிய இடங்களை அதிகரிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அன்வார் தெரிவித்தார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)