Ad Banner
 உலகம்

பாகிஸ்தான் தீ விபத்தில் 26 உடல்கள் மீட்பு

20/01/2026 06:41 PM

பாகிஸ்தான், ஜனவரி 20 (பெர்னாமா) -- பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள குல் பிளாசா வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரழந்த 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

சுமார் 1,200 கடைகள் மற்றும் 4,500 ஊழியர்களையும் கொண்ட அந்தக் கட்டடத்தின் தீயை அணைக்க 200 தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழு 24 மணி நேரத்திற்கும் மேலாக போராடியது.

சனிக்கிழமை இரவு நிகழ்ந்த இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அதிகமானோர் இன்னும் கண்டறியப்படாத நிலையில் 65 பேரின் இருப்பிடம் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சத்து 44 நான்காயிரத்து 738 ரிங்கிட் இழப்பீடு தொகை வழங்கப்படுவதாக சிந்து மாகாணத்தின் முதலமைச்சர் முராத் அலி ஷா நேற்று அறிவித்திருந்தார்.

இந்த விபத்தில் வளாகத்தின் அனைத்து தளங்களும் தீயில் சேதமடைந்தன.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மெத்தனப்போக்குனடன் செயல்பட்ட தரப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிந்து மாகாணத்தின் அரசாங்க பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)