Ad Banner
 பொது

உள்ளூர் சந்தைகளில் போதுமான கோழி & முட்டைகளின் கையிருப்பு

26/01/2026 04:44 PM

ஜாலான் பார்லிமன், ஜனவரி 26 (பெர்னாமா) -- உள்ளூர் சந்தைகளில் கோழி மற்றும் முட்டைகளின் கையிருப்பு போதுமானதாக இருப்பதாகவும் அடுத்த மாதம் குறிப்பாக ரமலான் மாதத்தில் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

தற்போது சந்தையில் அவ்விரு பொருள்களின் கையிருப்பு நிலையானதாக இருப்பதை விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சின் தரவுகள் காட்டுவதாக அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு  கூறினார்.

"எனினும், சில நேரங்களில் சந்தை மிகவும் பாதிக்கப்படுவதற்கு இதுவே காரணம் என்பதையும் நாங்கள் காண்கிறோம். கடத்தல் பிரச்சனை உட்பட. அதனால்தான் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் தொடர்புடைய அமைச்சுகளும் கடத்தல் நடவடிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்", என்றார் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு.

இன்று மக்களவையில் நடைபெற்ற கேள்வி பதில் நேரத்தின்போது முஹமட் சாபு அவ்வாறு கூறினார்.

சிறிய அளவிலான கால்நடை வளர்ப்போர் பெரிய அளவில் தங்களின் தொழில்துறையை மாற்றுவதற்கு அமைச்சின் முயற்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள் அடிப்படையில் விவசாயிகளின் தயார்நிலையின் அளவை இம்மாற்றம் கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்று டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)