கோலாலம்பூர், பிப்ரவரி 6 (பெர்னாமா) -- கூட்டரசுப் பிரதேசத்தை உட்படுத்தி தலா நூறு ஆலயங்களும், சீன கோயில்களும் உள்ளன.
அவற்றில் பெரும்பாலானவை குறிப்பாக ஆலயங்கள், நிலப்பட்டா இல்லாமல் அரசாங்க நிலத்திலும், P-T-P எனப்படும் ஒரு நிறுவனத்தின் கீழும், இன்னும் சில ஒதுக்கப்பட்ட நிலத்திலும் அமைந்திருப்பது மறுப்பதற்கில்லை.
அத்தகைய ஆலயங்களை அதன் தொகுதி வாரியாகப் பிரித்து அந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் நேரடிப் பார்வையில், அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சு எண்ணம் கொண்டிருப்பதாக பத்து நாடாளுமன்
''கோலாலம்பூரில், அரசாங்க நிலத்தில் இருக்கும் கோவில்களின் எண்ணிக்கை மொத்தம் 64. நிலப்பட்டா இல்லாமல் அரசாங்க நிலத்திலும், P-T-P எனப்படும் ஒரு நிறுவனத்தின் கீழும், இருக்கும் கோவில்கள் மொத்தம் 19,'' என்றார் பிரபாகரன்.
இவ்விவகாரத்திற்கு முதற்கட்ட தீர்வு காண்பதற்காக, கூட்டரசுப் பிரதேசத்தை உட்படுத்திய ஆலயங்களை மையப்படுத்தி தாம் ஒரு GOOGLE படிவத்தை தயார் செய்துள்ளதாகவும் பிரபாகரன் கூறினார்.
''நிலப் பிரச்சனை, R-O-S பிரச்சனையை எதிக்கொள்ளும் யாராயிருந்தாலும் அவர்களின் சிக்கல்களை கலைய நேர்க்காணல் ஒன்றை ஏற்பாடு செய்ய உள்ளோம். இந்து சங்கல் மற்றும் இன்னும் பல N-G-O உடல் இணைந்து 1 நாள் முகாமும் நடத்தவுள்ளோம். பிரபாகரன் பரமேஸ்வரன்,'' என்றுஅவர் கூறினார்.
ஓரிடத்தில் ஆலயத்தை நிர்மாணிப்பதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட அந்த நிலம் குறித்து முழுமையான ஆய்வுகளை ஆலய நிர்வாகம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அவ்வாறு செய்யாத பட்சத்தில், இத்தகைய பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்றும் பிரபாகரன் கூறினார்.
இதனிடையே, ஆலயங்களை உட்படுத்தி அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் புதிய வழிகாட்டி குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டார்.
இன்று செந்தூல், பண்டார் பாருவில் வீற்றிருக்கும், தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய அடிக்கல் நாட்டு விழாவில் நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)