புத்ராஜெயா, 06 பிப்ரவரி (பெர்னாமா) -- மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணங்களின் போது வெளிநாட்டுத் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
வெளிநாட்டு விருந்தினர்களை வரவேற்கும் போது, எந்தவொரு தரப்பினரும் இடையூறு விளைவிக்க அரசாங்கம் அனுமதிக்காது என்று இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியதாக மடானி அரசாங்கத்தின் பேச்சாளர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
''பொதுமக்கள் மற்றும் நாட்டிற்கு வரும் விருந்தினர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கும் உத்தரவாதம் அளிப்பதற்கும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்'', என்றார் அவர்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் ஃபஹ்மி அத்தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, நாளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மலேசியாவிற்கு இரண்டு நாள்கள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொள்ளவிருக்கிறார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)