மெல்பன், ஜனவரி 27 (பெர்னாமா) -- ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டி
மெல்பன் பார்க் அரங்கில் கடும் வெயிலில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் இவா ஜோவிக்கைப் பெலாருசின் அரினா சபலென்கா தோற்கடித்தார்.
இதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்றாவது ஆஸ்திரேலிய பட்டத்தைக் கைப்பற்றும் பாதையில் சபலென்கா தொடர்ந்து முன்னேறி வருகிறார்.
அமெரிக்காவின் 18 வயது வீராங்னையான இவா ஜோவிக்கைத் தமது அனுபவ ஆட்டத்தின் வழி அரினா சபலென்கா 6-3 6-0 என்று மிக எளிதில் நேரடி செட்களில் வீழ்த்தினார்.
உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அவர் 2023 மற்றும் 2024 ஆண்டுகளின் வெற்றியாளர் ஆவார்.
கடந்த ஆண்டு இரண்டாம் இடம் பிடித்திருந்த சபலென்கா சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இடம் பிடிக்க கோக்கோ கௌஃப் அல்லது எளிய ஸ்விடோலினா ஆகியோரில் ஒருவரை அரையிறுதியில் எதிர்கொள்ள உள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)