பத்து மலை, ஜனவரி 31 (பெர்னாமா) -- தேசிய உணர்வையும் மக்களின் ஒற்றுமையும் பிரதிபலிக்கும் விழாவான தைப்பூசக் கொண்டாட்டத்தின் போது, மத வழிபாட்டு நெறிமுறைகளை மதிக்குமாறு பொதுமக்களுக்கு நினைவூட்டப்படுகிறது.
தைப்பூசம் கேளிக்கை விழா அல்ல என்றும் அது புனிதமான மத வழிப்பாடாகும் என்றும் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம்.குமார் தெரிவித்தார்.
இன்று காலையிலிருந்து இரதம் சென்றுகொண்டிருந்தது. சாலைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் அனைவரின் ஒத்துழைப்பாலும் திருவிழா சுமுகமாக நடைபெற்று வருகிறது'', என்றார் டத்தோ எம்.குமார்.
தைப்பூசத்தை முன்னிட்டும் பத்துமலை திருத்தல பகுதியில் இன்று தொடங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு வரை மொத்தம் 88 போலீஸ் உறுப்பினர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக டத்தோ எம்.குமார் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)