Ad Banner
 பொது

பறிமுதல் செய்யப்பட்ட சிறிய வகையிலான எரிவாயு பலூன் வெடிப்பு; இரு அமலாக்க உறுப்பினர்கள் காயம்

02/02/2026 05:21 PM

ஜார்ஜ்டவுன், பிப்ரவரி 02 (பெர்னாமா) -- நேற்று தைப்பூச கொண்டாட்டத்தின் போது பறிமுதல் செய்யப்பட்ட சிறிய வகையிலான எரிவாயு பலூன் வெடித்து தீப்பிடித்ததில் பினாங்கு மாநகராண்மைக் கழகம், MBPPஇன் இரு அமலாக்க உறுப்பினர்கள் காயமடைந்தனர். 

MBPP உரிமத் துறை அலுவலகத்திற்கு எதிரே உள்ள லேபூஹ் யூனியனில் இரவு மணி 7.55 அளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக MBPP இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இச்சம்பவத்தில் ஒருவருக்கு இரு கைகளிலும் முகத்தின் ஒரு பகுதியிலும் தீக்காயங்கள் ஏற்பட்டன.

தற்போது அவர் பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

மற்றொருவர் சொற்ப காயங்களுக்கு ஆளாகியிருக்கும் நிலையில் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

அமலாக்க நடவடிக்கையின் போது பறிமுதல் செய்த பலூனின் எரிவாயுவை வெளியேற்றுவதற்காக முயற்சித்தப் போது இச்சம்வம் நிகழ்ந்துள்ளதாக MBPP தெரிவித்துள்ளது.

இதில் MBPPயின் வாகனம் ஒன்றின் பின்புறமும் பறிமுதல் செய்யப்பட்ட உபகரணங்களும் தீப்பிடித்தன.

இதனைத் தொடர்ந்து, வியாபாரத்தை நிறுத்தி அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு சம்பந்தப்பட்ட வியாபாரிகளை MBPP அறிவுறுத்தியது.

எனினும், ஒரு சில வியாபார்கள் அதனைப் பின்பற்றததை MBPP சுட்டிக் காட்டியது.

முன்னதாக இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)