புத்ராஜெயா, பிப்ரவரி 02 (பெர்னாமா) -- கோலாலம்பூர், Datuk Bandar பதவிக்கு, தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட பரிந்துரை குறித்து, நாட்டின் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்று ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
நாடாளுமன்றத்தில், ஒரு உறுப்பினர் தாக்கல் செய்த தனிநபர் மசோதா, RUU-வைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் முதல் அனைத்துலக இஸ்லாமிய மலேசிய பல்கலைக்கழகமான, UIAM, இந்த ஆய்வை மேற்கொண்டு வருவதாகக், கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர், ஹன்னா யோ தெரிவித்தார்.
"இந்த ஆய்வு அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தால் (UIA) மேற்கொள்ளப்படுகிறது. இது ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகம். எனவே, இந்த ஆய்வை DAP-யைச் சேர்ந்தவர்கள் மேற்கொள்ளவில்லை. அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு தரம் வாய்ந்ததாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆய்வின் முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை, நாங்கள் அதற்காகக் காத்திருக்கிறோம்," என்றார் அவர்.
தவறாகப் பயன்படுத்தக்கூடிய பல்வேறு விளக்கங்களுக்கு இனி வாய்ப்பு இல்லை என்பதை உறுதி செய்வதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும்.
அதோடு, இதனால் ஊழலுக்கான வாய்ப்புகள் இனி இருக்காது என்றும் அவர் கூறினார்.
புத்ராஜெயாவில் கூட்டரசு பிரதேசத் துறைக்கும் எஸ்.பி.ஆர்.எம்க்கும் இடையிலான ஒத்துழைப்பு அறிக்கையில் கையெழுத்திட்ட பிறகு, நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஹன்னா யோ அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)