ரோட்டர்டாம், பிப்ரவரி 03 (பெர்னாமா) -- பிப்ரவரி 9ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ள ரோட்டர்டாம் பொது டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை ஆட்டக்காரர் கார்லோஸ் அல்காராஸ் கலந்து கொள்ளவில்லை.
இதன் வழி, ரோட்டர்டாம் பொது டென்னிஸ் போட்டியின் வெற்றியாளர் பட்டத்தை தற்காத்துக் கொள்ளும் தமது இலக்கில் இருந்து அவர் விலகியுள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களாகக் கடுமையாகப் பயிற்சிகளில் ஈடுபட்டதால் ஸ்பெயினைச் சேர்ந்த அல்காராஸ் மீண்டும் போட்டிகளில் பங்கேற்பதற்குச் சிறிது காலம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
Alcaraz விலகியதையடுத்து அப்போட்டியில் கலந்து கொள்வதாக உறுதி செய்துள்ள அலெக்ஸ்சாண்டர் ஸ்வேரெவ், டேனில் மெட்வெடேவ், அலெக்ஸ் டி மினார் மற்றும்
ப்ளீஸ் ஆயர்-அலியாஸ்ஸிம் ஆகிய இதர டென்னிஸ் நட்சத்திரங்கள் மீது கவனம் திரும்பியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2026ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 10 முறை வெற்றியாளர் பட்டத்தை வென்றுள்ள நோவக் ஜோகோவிச்சை 2-6, 6-2, 6-3 7-5 என்ற புள்ளிகளில் வீழ்த்தி அல்காராஸ் கிண்ணத்தைக் கைப்பற்றினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)