Ad Banner
 பொது

9 வயது சிறுமி அடித்து, பாலியல் வன்கொடுமை; ஆடவர் நாளை குற்றம் சாட்டப்படலாம்

04/02/2026 02:40 PM

ஷா ஆலாம், பிப்ரவரி 4 (பெர்னாமா) -- ஜனவரி 29-ஆம் தேதி, சிலாங்கூர், ரவாங், புக்கிட் செந்தோசா-வில், ஒன்பது வயது சிறுமியை அடித்து பாலியல் வன்கொடுமை புரிந்ததாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த வேலையில்லா ஆடவர் ஒருவர் மீது, நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படலாம்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 325-இன் கீழ், கோலா குபூ பாருமாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவ்வாடவர் குற்றஞ்சாட்டப்படுவார் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸாலி கஹார் தெரிவித்தார்.

அவ்வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை நிறைவடைந்து விட்டதாகவும், அவரை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கான உத்தரவும் கிடைத்து விட்டதாக, இன்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ ஷாஸாலி  தெரிவித்தார்.

சிறுமி ஒருவரை அடித்து துன்பறுத்தி, பாலியல் வன்கொடுமை புரிந்ததாக, சந்தேகத்தின் பேரில் 23 வயதான உள்ளூர் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டென்ட் இப்ராஹிம் ஹுசின் ஜனவரி 30-ஆம் தேதி அறிவித்திருந்தார்.

பாதிக்கப்பட்ட அச்சிறுமி தனது உடன்பிறப்புகளுடன் இரவு சந்தைக்குச் செல்லவிருந்தபோது அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கைது செய்யப்பட்டிருந்த அந்த வேலையில்லா ஆடவர் போதைப் பொருள் உட்கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)