Ad Banner
 பொது

அமெரிக்கா, சீனாவுடன் நல்லுறவை நிலைநிறுத்தி புதிய நாடுகளுடன் சந்தை வர்த்தக வாய்ப்புகளை மலேசியா ஆராயும்

04/02/2026 06:26 PM

ஸ்தாப்பாக், பிப்ரவரி 04 (பெர்னாமா) -- அமெரிக்கா மற்றும் சீனாவுடன் நல்லுறவை நிலைநிறுத்தும் அதே வேளையில் புதிய நாடுகளுடனான சந்தை மற்றும் வர்த்தக வாய்ப்புகளை மலேசியா தொடர்ந்து தீவிரமாக ஆராயும்.

மலேசியர்களுக்கு இன்னும் அதிகமான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் அந்நடவடிக்கை அவசியம் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அண்மைய ஆண்டுகளில், நாங்கள் தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அதிகமாக பயணித்திருக்கின்றோம். பிரேசில் மற்றும் பெருவில் பெரிய எண்ணெய் கிணறுகள் போன்ற புதிய வாய்ப்புகளைக் கண்டறிந்துள்ளோம். புதிய நாடுகளுடன் மலேசியாவின் வர்த்தக அதிகரிப்பு மற்றும் நாட்டிற்கான புதிய சந்தைகள் குறித்து நான் நாடாளுமன்றத்தில் அறிவித்தேன்'', என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்.

இன்று ஸ்தாப்பாக், துங்கு அப்துல் ரஹ்மான் நிர்வகிப்பு மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் TAR UMTஇல் மாணவர்களுடனான சந்திப்பின் போது அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

அமெரிக்கா மற்றும் சீனாவுடனான உறவுகளை மலேசியா வெற்றிகரமாகக் கையாண்டு வருகிறது என்றும் பிரதமர் கூறினார்.

அதோடு மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தி பொருளாதார முன்னேற்றத்தை முன்னுரிமப்படுத்துவதே மடானி அரசாங்கத்தின் கொள்கையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)

 KEYWORDS
 தொடர்புடைய செய்திகள்
 பரிந்துரை