Ad Banner
 பொது

எம்.எம்.2.எச் திட்டத்தின் கீழ் 744 வெளிநாட்டினர் மலேசியாவில் வீடுகளை வாங்கியுள்ளனர்

04/02/2026 02:48 PM

ஜாலான் பார்லிமன், பிப்ரவரி 4 (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை, எம்.எம்.2.எச் எனப்படும் மலேசியா எனது இரண்டாவது வீடு திட்டத்தின் கீழ், அதன் 744 பங்கேற்பாளர்கள் மலேசியாவில் வீடுகளை வாங்கியுள்ளனர்.

மேலும், 2,637 பங்கேற்பாளர்கள் வீடுகளை வாங்குவதற்கான செயல்முறையில் ஈடுபட்டிருப்பதாக , சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங் தெரிவித்திருக்கிறார்.

''சீனா 304, தைவான் 91, சிங்கப்பூர் 63, அமெரிக்கா 41, பிரிட்டன் 40, ஹாங்காங் 34, ஆஸ்திரேலியா 29, வங்களாதேசம் 19, தென் கொரியா 15, இந்தோனேசியா 14, மற்றும் ஜப்பான் 14 (எம்.எம்.2.எச். திட்டத்தின் கீழ் வீடு வாங்கிய வெளிநாட்டினரின் எண்ணிக்கை),'' என டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங் கூறினார்.

2023 முதல் 2025-ஆம் ஆண்டு வரை, எம்.எம்.2.எச் திட்டத்தின் மூலம் வெளிநாட்டினருக்கு விற்கப்பட்ட வீடுகள் குறித்து டுங்குன் நாடாளுமன்ற உறுப்பினர் வான் ஹஸ்சான் முஹமட் ரம்லி எழுப்பிய கேள்விக்கு தியோங் கிங் சிங் அவ்வாறு பதிலளித்தார்.

எம்.எம்.2.எச் திட்டத்தின் கீழ், அதன் பங்கேற்பாளர்கள் அவர்களின் பிரிவுகளுக்கு ஏற்ப ஆறு லட்சம் ரிங்கிட், 10 லட்சம் ரிங்கிட், மற்றும் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள வீடுகளை வாங்க முடியும்.


-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)