Ad Banner
 பொது

அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்; சிலாங்கூர் போலீசார் தீவிர நடவடிக்கை

04/02/2026 04:12 PM

ஷா ஆலம், பிப்ரவரி 04 (பெர்னாமா) -- அண்மையக் காலமாக கிள்ளான் மற்றும் பந்திங்கில் நடத்தப்பட்ட சில துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களைத் தொடர்ந்து, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை ஜே.எஸ்.ஜே-உடன் இணைந்து சிலாங்கூர் போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறனர்.

சிலாங்கூர் ஜே.எஸ்.ஜே-க்கும் புக்கிட் அமானுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதில் பரந்த அளவிலான உளவு நடவடிக்கையைப் பயன்படுத்த போலீசாருக்கு உதவுவதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் வ் தெரிவித்தார்.

"எனவே, பி.டி.ஆர்.எம்-க்கு நம்பிக்கை கொடுங்கள். அது உண்மையில் செயல்படுத்தப்பட்டுள்ளதோடு, செயல்படுத்தப்பட்டும் வருகிறது," என்றார் அவர்.

ஒரு வழக்கிற்குத் தீர்வு காண்பது என்பது உடனடி கைது நடவடிக்கை அல்லது குற்றச்சாட்டுகளைச் பொருத்து இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.

இதற்குக் காரணம், நடப்பில் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கக்கூடிய பிற சட்ட வழிகளும் உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)