Ad Banner
Ad Banner
 பொது

அதிகாரிகள் & ஊடகப் பிரதிநிதிகளுடன் ஒரு கலந்துரையாடல் - எம்.எம்.எம் பரிந்துரை 

09/04/2026 05:43 PM

கோலாலம்பூர், ஏப்ரல் 09 (பெர்னாமா) -- சம்பவ இடத்தில் செய்தி சேகரிப்பதற்கான நடைமுறைகள், செயல்பாட்டு எல்லைகள், தகவல் தொடர்பு நெறிமுறைகள் மற்றும் களத்தில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கும் வழிமுறைகள் ஆகிவற்றைத் தெளிவுபடுத்துவதற்காக...

அமலாக்கத் தரப்பினர் மற்றும் ஊடகப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு கலந்துரையாடல் சந்திப்பை நடத்துமாறு மலேசிய ஊடக மன்றம் எம்.எம்.எம் கோரிக்கை விடுத்துள்ளது.

செராசில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் ஏற்பட்ட தாக்குதல் தொடர்பான செய்தி சேகரிப்பின் போது, ​​அமலாக்கத் துறையினருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட சலசலப்பைத் தொடர்ந்து, அக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பரஸ்பர புரிதலை வளர்ப்பதற்கும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் அந்த கலந்துரையாடல் முக்கியமானது என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் எம்.எம்.எம் வலியுறுத்தியது.

ஒரு தொழில்சார் சுய ஒழுங்குமுறை அமைப்பாக, ஊடகங்களுக்கும் அமலாக்க நிறுவனங்களுக்கும் இடையிலான தொழில்முறைப் பணி உறவுகளை வலுப்படுத்துவதற்கான கலந்துரையாடலை எளிதாக்க எம்.எம்.எம் தயாராக உள்ளது.

ஊடகத் தொழில் என்பது பொதுமக்களுக்கு கடமையாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களே தவிர அத்தொழில் ஒரு குற்றமல்ல என்றும் அவ்வறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)