Ad Banner
 பொது

மலேசிய ஊடக மன்றத்துடன் அரசாங்கம் தொடர் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும்

05/02/2026 07:46 PM

புத்ராஜெயா, பிப்ரவரி 05 (பெர்னாமா) -- விரிவான ஊடக சுதந்திரத்தை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து, மலேசிய ஊடக மன்றம் எம்.எம்.எம்-உடன் அரசாங்கம் தொடர் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும்.

ஊடக சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த ஊடகத் துறையின் பிரதிநிதி அமைப்பாக எம்.எம்.எம்-இன் பங்களிப்பின் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தி இருந்ததாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார். 

"இவ்விவகாரம் குறித்து விவாதிக்க பின்னர் பிரதமர் நேற்று நள்ளிரவில் என்னை அழைத்தார். அவ்வழைப்பில் மலேசிய ஊடக மன்றத்தை வலுப்படுத்தும் தமது ஆவலையும் பிரதமர் வெளிப்படுத்தி இருந்தார். சில விசயங்களை நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் நாங்கள் ஊடக மன்றத்துடன் சில விவாதங்களை நடத்துவோம். அதனால்தான்  பிரதிநிதித்துவ அமைப்பாக ஊடகத் துறையில் உள்ள நண்பர்களை  நாங்கள் பார்க்கிறோம்," என்றார் அவர்.

இதைத் தவிர்த்து விளம்பரச் செலவு இழப்பின் தாக்கம் உட்பட துறையில் ஏற்படும் திடீர் மாற்றங்களின் சவால்களை எதிர்கொள்ள ஊடக நிறுவனங்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் ஊடக புத்தாக்க நிதியையும் தயார் செய்துள்ளதாக 
ஃபஹ்மி கூறினார்.

இம்முயற்சியை நடைமுறைப்படுத்த மலேசிய ஊடக மன்றத்துடன் ஒரு கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்றும் ஃபஹ்மி தெரிவித்தார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)