Ad Banner
 பொது

2025 'சாரா'-விற்காக 4,800 கோடி ரிங்கிட் நிதி பயன்படுத்தப்பட்டது

05/02/2026 07:54 PM

கோலாலம்பூர், பிப்ரவரி 05 (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டு முழுவதும் ரஹ்மா அடிப்படை உதவித் தொகை சாராவிற்காக 4800 கோடி ரிங்கிட் நிதியை 99 விழுக்காட்டு பயனர்கள் மைகார்ட் அடையாள அட்டையின் மூலம் ரொக்கமில்லா உதவியாக பயன்படுத்தினர்.  
 
ரஹ்மா உதவித் தொகை, STR-இன் கீழ் மாதாந்திர சாராவிற்காக ஒதுக்கப்பட்ட 500 கோடி ரிங்கிட் நிதியைப் பயன்படுத்தி, 56 லட்சம் பயனர்கள் தங்களின் மைகார்ட் அட்டையைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட வணிக வளாகங்களில் அடிப்படை பொருள்களை வாங்கியதாக, இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான் தெரிவித்தார். 

"ஒருமுறை மட்டும் வழங்கப்படும் சாரா உதவித் தொகையை இரண்டு கோடியே பத்து லட்சத்திற்கும் அதிகமான மலேசியர்கள் செலவு செய்துள்ளனர். அதாவது, உள்ளூர் சந்தையில் 205 கோடி ரிங்கிட்டிற்கும் அதிகமான பரிவர்த்தனை மதிப்பைக் கொண்ட மொத்த பெறுநர்களின் எண்ணிக்கையில் 96 விழுக்காடாகும்,'' என்றார் அவர்.

வரும் பிப்ரவரி ஒன்பதாம் தேதி 18 வயதிற்கு மேற்பட்ட மலேசியர்களுக்கு ஒருமுறை மட்டும் வழங்கப்படும் சாரா உதவிநிதிக்காக 220 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  

இன்று மக்களவையில் நடைபெற்ற கேள்வி பதில் நேரத்தின் போது அவர் அவ்வாறு கூறினார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)