அண்டாலுசியா, 05 பிப்ரவரி (பெர்னாமா) -- தென் ஸ்பெயின் மற்றும் போர்த்துகலில் ஏற்பட்ட பலத்த மழையுடன் கூடிய புயல் காற்று, அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
அதிலும் சில பகுதிகளில் ஓராண்டு காலத்திற்குப் பெய்ய வேண்டிய மழை, சில மணிநேரங்களில் பெய்வதற்கான அபாயமும் இருப்பதாக, ஸ்பெயின் வானிலை சேவை மையமான அமெட், எச்சரித்துள்ளது.
அண்டாலுசியா கூட்டரசில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் இருந்த 3,000 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இப்பேரிடரால் அங்குள்ள பள்ளிகளும் பல முதன்மையான சாலைகளும் மூடப்பட்டதுடன், பல வழித்தடங்களில் ரயில் சேவைகளும் தடைபட்டன,
கடந்த வாரம் ஏற்பட்ட பலத்த புயலால் ஏற்பட்ட பெரும் சேதத்திலிருந்து தற்போது தான் மீண்டு வரும் வேளையில், தற்போது மீண்டும் அதே நிலைமை அப்பகுதியைப் புரட்டிப் போட்டுள்ளது.
பல கிராமங்களுக்கான இணைப்புகளை அதிகாரிகள் முன்னதாக துண்டித்ததன் விளைவாக, Leonardo என்று பெயரிடப்பட்ட இப்புதிய வெள்ளப்பெருக்கு, ஆறுகளை நிரம்பச் செய்ததுடன், பள்ளிகளும் மூடப்பட வேண்டிய கட்டாய நிலைமையை ஏற்படுத்தியது.
இப்பேரிடரதைத் தொடர்ந்து அங்கு நிலச்சரிவுகளும், மரங்கள் விழுந்ததால் சாலை மற்றும் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)