Ad Banner
 விளையாட்டு

ஆசியான் கிளப் வெற்றியாளர் கிண்ணம்; வியட்நாம் மலேசியா - சமநிலை

06/02/2026 05:07 PM

வியட்நாம், 06 பிப்ரவரி (பெர்னாமா) --  2025/2026 ஆசியான் கிளப் வெற்றியாளர் கிண்ண காலிறுதி போட்டிக்கு ஜோகூரின் ஜே.டி.தி முன்னேறியுள்ளது.

வியட்நாமின் நாம் டின் எஃப்.சி உடன் 1-1 என்று சமநிலை முடிவை அடைந்த போதிலும், அதிக புள்ளி வித்தியாசத்தில் ஜே.டி.தி அடுத்த சுற்றில் கால் வைத்திருக்கின்றது.

வியட்நாமின் தியென் துரூங் அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதல் பாதியிலேயே கோல் அடிக்க வேண்டும் என்ற நோக்கில் இரு அணிகளும் தீவிரமாக விளையாடின.

சொந்த இடத்தில் விளையாடிய நாம் டின் எஃப்.சி தனது முதல் கோலை 33-வது நிமிடத்தில் போட்டதுடன் முதல் பாதி நிறைவடைந்தது.

மலேசியாவின் ஒரே கோல், இரண்டாம் பாதி ஆட்டத்தின் 89-வது நிமிடத்தில் பெர்க்சன் டா சில்வா வழி போடப்பட்டது.

ஆட்டம் முடியும் வரை இதே நிலை தொடர்ந்ததால், 1-1 என்ற கோல் எண்ணிக்கையில் இரு அணிகளும் சமன் கண்டன.

B குழு புள்ளிப்பட்டியலில் ஜே.டி.தி இரண்டாம் இடம் பிடித்ததால், அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)