Ad Banner
 விளையாட்டு

அறிமுக ஆட்டத்திலேயே கவனம் ஈர்த்தார் பென்செமா

06/02/2026 05:17 PM

ரியாத், 06 பிப்ரவரி (பெர்னாமா) --  சவூதி ப்ரோ லீக் கிண்ண காற்பந்து போட்டியில், அறிமுக ஆட்டத்திலேயே அல்-ஹிலால் கிளப்பிற்கு ஹாட்ரிக் கோல் அடித்து கரிம் பென்செமா கவனத்தை ஈர்த்திருக்கின்றார்.

இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் 6-0 என்ற கோல் கணக்கில் அந்த கிளப் வெற்றி அடைந்த நிலையில், அதில் மூன்று கோல்களை பென்செமா அடித்துள்ளார்.

38 வயதான தாக்குதல் ஆட்டக்காரரான கரிம் பென்செமா, அல்-இத்திஹட் அணியுடன் ஒப்பந்த நீட்டிப்பை மறுத்ததாக வெளியான தகவல்களை அடுத்து, கடந்த திங்கட்கிழமை அல்-ஹிலால் அணியில் இணைந்தார்.

ரியல் மாட்ரிட் அணிக்காக 14 ஆண்டுகள் விளையாடிய பின்னர், இலவச மாற்றத்தின் மூலம் அவர் 2023-ஆம் ஆண்டு, அல்-இத்திஹட் அணியில் சேர்ந்து விளையாடினார்.

தற்போது, அல்-ஹிலால் கிளப்பில் இணைந்திருக்கும் பென்செமா அதிரடி ஆட்டத்தின் வழி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

முதல் பாதி ஆட்டத்தில் முதல் கோலையும், இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு கோல்களையும் போட்டு அவர் அரங்கின் கவனத்தை ஈர்த்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)