கோலாலம்பூர், 08 பிப்ரவரி (பெர்னாமா) -- கோலாலம்பூரில் சட்டவிரோத வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராகப் பேரணி நடத்திய மத போதகர் சம்ரி வினோத் கைது செய்யப்பட்டார்.
சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட இப்பேரணியில் மேலும் சில நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்ரி வினோத் கைது செய்யப்பட்டதை உறுதி செய்த கோலாலம்பூர் போலீஸ் தலைவர் Datuk Fadil Marsus, இக்கைது நடவடிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இரவு மணி 9-க்கு திட்டமிடப்பட்டிருந்த அப்பேரணி நடத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
அப்பகுதியைச் சுற்றியுள்ள வளாகங்களின் உரிமையாளர்கள் உட்பட, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இருந்து கருத்துக்களைப் பெற்ற பின்னர், பாதுகாப்பு கருதி அப்பேரணியை நடத்துவதற்கு போலீஸ் முன்னதாக அனுமதி வழங்கவில்லை.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)