Ad Banner
 விளையாட்டு

EFL லீக் கிண்ணம்; இறுதிப்போட்டிகு முன்னேறியது சிட்டி

05/02/2026 08:04 PM

லண்டன், 05 பிப்ரவரி (பெர்னாமா) -- EFL லீக் கிண்ண காற்பந்து போட்டியில் இன்று அதிகாலை நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், மென்செஸ்டர் சிட்டி 3-1 என்ற கோல் எண்ணிக்கையில், நியூகாஸ்டல் யுனைடெட் அணியைத் தோற்கடித்துள்ளது.

முதல் அரையிறுதி ஆட்டத்தில் 2-0 என்ற நிலையில் வெற்றி பெற்ற சிட்டி, தற்போது 5-1 என்று மொத்த கோல் எண்ணிக்கையில் இறுதிப் போட்டிகு முன்னேறியது.

எதிஹாட் அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், மென்செஸ்டர் சிட்டி அணி வெற்றி பெறும் என்று பரவாக கணிக்கப்பட்டது.

அதற்கேற்றவாறு, ஆட்டத்தின் 7, 29 மற்றும் 32-வது நிமிடங்களில் சிட்டி வரிசையாக அதன் மூன்று கோல்களைப் போட்டு 3-0 என்ற நிலையில் முதல் பாதியை முடித்தது.

அந்த வெற்றியைத் தடுத்த நிறுத்த போராடிய நியூகாஸ்டல் யுனைடெட் அணியின் ஒரே கோல் இரண்டாம் பாதி ஆட்டத்தின் 62-வது நிமிடம் அடிக்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம், 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெம்பிளி அரங்கில் நடைபெறும் லீக் கிண்ண இறுதிப் போட்டிக்கு சிட்டி மீண்டும் திரும்பியுள்ளது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)