உலு சிலாங்கூர், பிப்ரவரி 13 (பெர்னாமா) -- அமலாக்கத் தரப்பினரால் அடையாளம் காணப்படுவதிலிருந்து தவிர்ப்பதற்காக, நகர்ப்புறத்தில் பணிபுரிந்தாலும் புறநகர் பகுதிகளில் வாடகைக்கு இருக்கும் சட்டவிரோத குடியேறிகளின் தந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை புக்கிட் பெருந்தோங்கில் உள்ள பழைய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், சிலாங்கூர் மாநில குடிநுழைவுத் துறை தலைமையிலான ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் அவர்களின் தந்திரச் செயல் அம்பலமானதாக, குடிநுழைவுத் துறையின் சிலாங்கூர் மாநில இயக்குநர் கைருல் அமினுஸ் கமாருடின் தெரிவித்தார்.
மாதத்திற்கு 400-இல் இருந்து 600 ரிங்கிட் வரையிலான குறைந்த விலையிலான வீட்டில் வாடகைக்கு அவர்கள் தங்கியிருப்பதாக அவர் கூறினார்.
அதுமட்டுமின்றி, சட்டவிரோதக் குடியேறிகள் உட்புற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து ஒளிந்து கொள்ள சக நாட்டவரின் நட்பும் காரணம் என்றும் அவர் விவரித்தார்.
நேற்றிரவு மணி 8.30 தொடங்கி பின்னிரவு மணி ஒன்று வரை, சிலாங்கூர், உலு சிலாங்கூரில் இந்த ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)