Ad Banner
Ad Banner
 உலகம்

நேபாளத்தில் பேருந்து விபத்து; 17 பேர் பலி

23/02/2026 06:54 PM

டாடிங், 23 பிப்ரவரி (பெர்னாமா) -- நேபாள தலைநகர் காத்மாண்டு நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து, திஷுலி எனும் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 24 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து டாடிங் எனும் மாவட்டத்தில் இன்று அதிகாலை மணி 1.30-க்கு நிகழ்ந்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை மீட்க, விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் கூறியது.

இறந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேவேளையில் காயமடைந்த பயணிகள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]