Ad Banner
Ad Banner
 பொது

பினாங்கு தெப்பத் திருவிழாவில்  'மக்கும்' பொருள்களுக்கு மட்டுமே அனுமதி

26/02/2026 06:00 PM

ஜார்ஜ்டவுன், பிப் 26 - ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மாசிமக தெப்பத் திருவிழா பங்கோர் தீவிலும் பினாங்கு மாநிலத்திலும் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும்.

வரும் மார்ச் இரண்டாம் தேதி பினாங்கு, தெலுக் பஹாங் கடற்கரை ஓரத்தில் வீற்றிருக்கும் ஶ்ரீ சிங்கமுக காளியம்மன் ஆலயத்தில் 130-வது ஆண்டாக கொண்டாடப்படும் இவ்விழா சிறப்பாகவும் மாசுபாடின்றியும் நடைபெறும் விதமாக 'மக்கும்' பொருள்களை மட்டுமே கடலில் விடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தரராஜூ சோமு தெரிவித்தார்

"கடந்த காலங்களில் மக்கா பொருளையும் அல்லது மக்குவதற்கு ஆண்டுக் கணக்கில் அவகாசம் எடுக்கும் பொருள்களை மட்டுமே கடலில் கடலில் விடுவார்கள். இது கடலுக்கும் அதில் வாழும் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தன. இவ்விவகாரத்தை களையும் விதமாக கடந்தாண்டு முதல் மக்கா பொருள்களை கடலில் விடுவதற்கு பினாங்கு மாநில அரசாங்கம் அனுமதி மறுத்திருந்தது. இவ்வாண்டும் அதே முறை பின்பற்றப்படுகிறது," என்றார் அவர்.

மாநிலத்தை சுகாதாரமான முறையில் மாசுபாடு ஏதும் இல்லாமலும் பாதுகாப்பதில் பினாங்கு அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் இவ்விழாவிற்கும் வருகைப் புரிவோர் பின்பற்ற வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்.

தெப்பத் திருவிழாவை முன்னிட்டு ஜாஜ்ர்வுடனிலிருந்து இலவச பேருந்து சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதால் நெரிசலைக் குறைப்பதற்காக பக்தர்கள் முடிந்தவரை சொந்தப் போக்குவரத்தை தவிர்த்து கொள்ளுமாறும் டத்தோ ஶ்ரீ  சுந்தரராஜூ ஆலோசனைக் கூறினார்

இதனிடையே, நெகிழி மற்றும் நுரைப்பம் போன்ற  'மக்கா' பொருள்களை பயன்படுத்தாவிடில், பசுமை நிறைந்த மாநிலமாக பினாங்கு மிளிரும் என்று அம்மாநிலத்தில் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி & ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி. சுப்பாராவ் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இத்கைய முறையை ஆண்டுதோறும் பயன்படுத்தினால் கடல் தூய்மைகேடு இல்லாமல்  பாதுகாக்கப்படுவதோடு அதில் உள்ள உயிரினங்களும் பாதிக்கப்பட்டாது
 என்று சுப்பாராவ் கூறினார்.

தெப்பத் திருவிழாவை முன்னிட்டு இன்று சிங்கமுக காளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் அவர்கள் அந்த விபரங்களைத்  தெரிவித்தனர். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)