Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

தீவிரமடையும் இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் போர்

01/03/2026 04:56 PM

தெஹ்ரான், 01 மார்ச் (பெர்னாமா) -- ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான சர்ச்சையைத் தீர்ப்பதற்காக அண்மையில் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த பின்னர், ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் நேற்று தாக்குதலைத் தொடங்கின.

ஈரானின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், பல உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டின் ஊடகங்கள் கூறுகின்றன.

இருப்பினும், பலி எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் மேற்கொண்ட நிலையில், ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய கிழக்கில் ஐக்கிய அரபு சிற்றரசு, பஹ்ரேன், குவைத், கத்தார், சவூதி அரேபியா, ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)