Ad Banner
Ad Banner
 விளையாட்டு

துபாய் டென்னிஸ் போட்டி; மெட்வெடேவ் வெற்றியாளராக அறிவிப்பு

01/03/2026 04:43 PM

துபாய், 01 மார்ச் (பெர்னாமா) -- துபாய் டென்னிஸ் போட்டியின் வெற்றியாளர் பட்டத்தை ரஷ்யாவின் டேனில் மெட்வெடேவ் தட்டிச் சென்றார்.

நேற்றிரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், டலோன் கிரிக்ஸ்பொர் காயம் காரணமாக விலகிக் கொண்டதால் Medvedev வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், ஐந்தாம் நிலை விளையாட்டாளரான ஆண்ட்ரெ ருப்லெவ்வை தோற்கடித்த  கிரிக்ஸ்பொருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது.

அதன் பின்னர் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இறுதிப் போட்டியிலிருந்து விலக முடிவு செய்ததாக கிரிக்ஸ்பொர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)