Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பினாங்கில் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர் நியமனம்

06/03/2026 04:06 PM

ஜார்ஜ்டவுன், 06 மார்ச் (பெர்னாமா) -- இன்று, ஜார்ஜ்டவுன், ஶ்ரீ முத்தியாராவில் நடைபெற்ற எளிய சடங்கில், புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர்   புதிய பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

மாநில ஆளுநர், துன் ரம்லி ஙா தலிப் முன்னிலையில், நியமனப் பத்திரம் வழங்குவது, பதவிப் பிரமாணம் மற்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கான ரகசியக் காப்புப் பிரமாணம் நிறைவேற்றப்பட்டது.

மார்ச் நான்காம் தேதி, Pantai Jerejak சட்டமன்ற உறுப்பினர் ஃபஹ்மி சைனோல் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோ அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

அவரின் நியமனத்தைத் தொடர்ந்து, பினாங்கு மாநில அரசாங்கத்தின் நிர்வாகப் பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய, மூன்று ஆட்சிக்குழு உறுப்பினர்களின் துறைகளை மறுசீரமைப்பதாக முதலமைச்சர் சோவ் கொன் யோவ் அறிவித்தார்.

"கோ சூன் ஐக்-கிற்கு வர்த்தகம் மற்றும் சமூக ஒற்றுமை செயற்குழு வழங்கப்படுகிறது. சிறிய மாற்றத்தைக் கொண்டிருக்கும் இருவர், டத்தோ டாக்டர் முஹமட் அப்துல் ஹமிட், முதலாவது துணை முதலமைச்சராகவும், முன்னதாக வகித்த இஸ்லாமிய மத மேம்பாடு, கல்வி மற்றும் உயர்கல்வி செயற்குழுவிற்கு தலைமையேற்பார். அதோடு சமூக ஒருமைப்பாடாக இருந்த பொறுப்பும் தற்போது கூட்டுறவுக் கழக மேம்பாடாக மாற்றப்பட்டுள்ளது," என்றார் அவர். 

புறநகர் மேம்பாடு, வேளாண் தொழில்நுட்பம், உணவு உத்தரவாதம் மற்றும் தொழில்முனைவோர் செயற்குழுவிற்கு, டத்தோ ரஷிடி சினோல் பொறுப்பேற்பதாகவும் சோவ் கூறினார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]