Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

மத்திய கிழக்கு மோதல்கள்; உதவிகளை வழங்குவதில் பெரும் தடை

06/03/2026 04:38 PM

நியூ யார்க், 06 மார்ச் (பெர்னாமா) -- மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் பயணப் பாதைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகளினால், உதவிகளுக்கான விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து உதவிகளை வழங்குவதில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த இடையூறுகளினால் உதவிப் பணியாளர்களின் இயக்கம் கட்டுப்படுத்தப்படுவதாகவும், பல பகுதிகளில் உணவு கையிருப்பு குறையும் அபாயம் இருப்பதாகவும், ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா-வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த இரு நாள்களில் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென் லெபனான், பால்பெக், ச்சூஃப் மற்றும் பெய்ரூட்டின் தென் புறநகர்ப் பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களை அடுத்து அதிக உயிரிழப்புகளும் பேரழிவும் ஏற்பட்டுள்ளன. 

செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் துணை மருத்துவர்கள் மூவர் கொல்லப்பட்ட வேளையில் அறுவர் காயமடைந்தனர்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]