Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

2026 அகில இங்கிலாந்து பூப்பந்து; இறுதி சுற்றில் ஏரன் - வூய் இக்

08/03/2026 07:11 PM

பெர்மிங்ஹம், 08 மார்ச் (பெர்னாமா) -- 2026 அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியின் இறுதி சுற்றில் கால் பதித்து, ஏரன் சியா - சோ வூய் இக் இணையினர், அப்பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொண்டுள்ளனர்.

நாட்டின் ஆடவர் இரட்டையரான அவர்கள், இன்று அதிகாலை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் சென் பொ யாங் - லியூ யீ ஜோடியைத் தோற்கடித்தனர்.   

யுட்டிலிட்டா பெர்மிங்ஹம் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தின், முதலாம் செட்டில் 15-வது நிமிடத்திலேயே ஏரன் - வூய் இக் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். 

எனினும், இரண்டாம் செட்டில் 15-18 என்ற புள்ளிகளில் அந்த ஜோடி பின் தங்கியது. 

வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாம் செட்டில், இரு அணியினருமே தங்களின் அபார ஆட்டத் திறனை வெளிப்படுத்தி 18-18-க்கு என சமன் கண்டதை அடுத்து, அவ்வாட்டம் மேலும் விறுவிறுப்பானது. 

இந்நிலையில், 21-19 என்ற புள்ளிகளில் உலகின் இரண்டாம் நிலை ஜோடியான ஏரன் - வூய் இக் அவ்வாட்டத்தை வெற்றி கொண்டனர்.  

இறுதி சுற்றில், தென் கொரிய ஆட்டக்காரர்களான கிம் வொன் ஹொ - சியோ சியுங் ஜே ஜோடியை ஏரன் - வூய் இக் சந்திக்கவுள்ளனர். 

இதனிடையே, நாட்டின் மகளிர் இரட்டையரான பெர்லி டான் - எம். தீனா தென் கொரியாவைச் சேர்ந்த பெக் ஹ நா - லீ சொ ஹீ ஜோடியிடம் 7-21, 18-21 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டனர்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]