Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

இந்தியன் வெல்ஸ் பொது டென்னிஸ் போட்டி; இறுதி ஆட்டத்தில் சபலென்கா

14/03/2026 05:39 PM

கலிஃபோர்னியா, 14 மார்ச் (பெர்னாமா) - இந்தியன் வெல்ஸ் பொது டென்னிஸ் போட்டியில்  இருமுறை இரண்டாம் இடம் பிடித்திருந்த பெலாருசின் அரினா சபலென்கா மீண்டும் அந்த போட்டியை வெல்லும் வாய்ப்பை தற்போது பெற்றுள்ளார். 

நேற்று, நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அவர் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை  நேரடி செட்களில் வீழ்த்தினார். 

உலகின் முதன்நிலை வீராங்கனையான அரினா சபலென்கா அவரை மிக எளிதில் எதிர்கொண்டார். 

1 மணிநேரம் 28 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில், 6-3, 6-4 என்று அவர் வெற்றி பெற்றார்.

நாளை நடைபெறவிருக்கும் இறுதி ஆட்டத்தில் அவர் கசக்ஸ்தானின் உடன் களம் காணவிருக்கின்றார்.

2026 ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் பட்டத்தை Rybakina-விடம் நழுவ விட்ட சபலென்கா, அந்த பின்னடைவில் இருந்து தம்மை மீட்டுக்கொள்ள இறுதி ஆட்டத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கபடுகிறது. 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)