Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

அரேபிய வளைகுடாவை விட்டு அமெரிக்கா வெளியேற வேண்டும் - ஈரான்

15/03/2026 05:15 PM

தெஹ்ரான், 15 மார்ச் (பெர்னாமா) -- போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால் அரேபிய வளைகுடாவை விட்டு அமெரிக்கா வெளியேற வேண்டும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. 

அதுவரையில், அமெரிக்காவுக்குச் சொந்தமான எந்தவொரு கப்பலும் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க அனுமதிக்கப்படமாட்டாது என்று அந்நாட்டின் உயர் அதிகாரி மோஹ்சென் ரிசாய் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். 

அமெரிக்கா ஏற்படுத்தி இருக்கும் சேதத்துக்கு முதலில் அது முழு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும்  பின்னர் அந்த வட்டாரத்தை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார். 

அப்போதுதான் போரை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி ஆலோசக்கப்படும் என்று அவர் கூறினார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)