Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

எம்.ஆர்.டி ரயிலின் மின்கம்பிகள் திருட்டு; நால்வர் கைது 

15/03/2026 05:10 PM

கோலாலம்பூர், 15 மார்ச் (பெர்னாமா) -- புத்ராஜெயா வழித்தடத்திற்கான எம்.ஆர்.டி ரயிலின் மின்கம்பிகளை திருடிய சம்பவத்திற்கு தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நால்வரை அண்மைய சோதனை நடவடிக்கையின் போது போலீசார் கைது செய்தனர்

போலீசாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் Prasarana Malaysia நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

திருடப்பட்ட இடத்தை அடையாளம் காணவும், கண்டுப்பிடிக்கப்பட்ட பொருள்கள் தொடர்பான விசாரணைக்கு உதவ, கைது செய்யப்பட்ட 30 முதல் 45 வயதுக்குட்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் சம்பவ இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக, அந்த அறிக்கையில் Prasarana குறிப்பிட்டிருந்தது. 

மார்ச் 3-ஆம் தேதி ஶ்ரீ டாமன்சாரா எம்.ஆர்.டி நிலையம் அருகே நிகழ்ந்த மின்கம்பிகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து Prasarana நிறுவனம் போலீசாருக்கு வழங்கிய புகாரைத் தொடர்ந்து, இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.  

இச்சம்பவத்தின் மூலம் மூன்று நாள்களுக்கு புத்ராஜெயா வழித்தடத்திற்கான எம்.ஆர்.டி  சேவையில் இடையூறு ஏற்பட்டதாகவும் சுமார் ஆயிரக்கணக்கான பொதுப் போக்குவரத்து பயனர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதாகவும் Prasarana கூறியது.    

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)