கோத்தா கினபாலு, 15 மார்ச் (பெர்னாமா) -- ரமலான் மாதம் முழுவதும் கடுமையாக உழைத்த மக்களின் அர்ப்பணிப்பை பாராட்டும் விதமாக நோன்பு பெருநாள் கொண்டாட்டத்துடன் இணைந்து ஒரு நாள் கூடுதல் விடுமுறையை வழங்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
இருப்பினும், Syawal முதல் நாள் தொடர்பான அறிவிப்பு பொருத்தே அந்த கூடுதல் விடுமுறை வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நோன்பு பெருநாள் வெள்ளிக்கிழமை மார்ச் 20-ஆம் தேதி கொண்டாடப்பட்டால், மார்ச் 23-ஆம் தேதி திங்கட்கிழமை கூடுதல் விடுமுறை வழங்கப்படும் என்றும், சனிக்கிழமை மார்ச் 21-ஆம் தேதி கொண்டாடப்பட்டால் ஒரு நாள் முன்னதாக மார்ச் 20-ஆம் தேதி விடுமுறை வழங்கப்படும் என்றும் டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.
"நோன்பு பெருநாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டாலும் சரி, சனிக்கிழமை கொண்டாடப்பட்டாலும் சரி. கவலைப்பட வேண்டாம். நாங்கள் கூடுதல் விடுமுறை வழங்குவோம். வெள்ளிக்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டால் 23-ஆம் தேதி திங்கட்கிழமை கூடுதல் விடுமுறை வழங்கப்படும். சனிக்கிழமை கொண்டாடப்பட்டால் மார்ச் 20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கூடுதல் விடுமுறை வழங்கப்படும்", என்றார் அவர்.
நோன்பு பெருநாளை முன்னிட்டு, மக்கள் தங்களின் பயணத்தை திட்டமிட எளிதாக்கும் முயற்சியாக, கூடுதல் விடுமுறையை முன்கூட்டியே அறிவிக்க அரசாங்கம் முடிவு செய்ததாக, அன்வார் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)