கோலாலம்பூர், 20 மார்ச் (பெர்னாமா) -- நாட்டின் மறுசுழற்சி பொருளாதாரத்தை ஆதரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், U-C-O வர்த்தகத்தில் தொழில்துறையினரும் பொதுமக்களும் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்று மலேசிய செம்பனை எண்ணெய் வாரியம், M-P-O-B ஊக்குவிக்கிறது.
பரிவர்த்தனை வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், U-C-O-வை வாங்குதல் மற்றும் விற்பனை செயல்முறையை எளிதாக்கவும், உள்நாட்டு சந்தைக்காக பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் விலை குறிப்பு இணையத் தளத்தை M-P-O-B உருவாக்கியுள்ளது.
அத்தளத்தை அனைத்து பங்குதாரர்களும் இலவசமாக அணுகலாம்.
மலேசியாவில் செம்பனை எண்ணெய் தொழில்துறையின் மதிப்புச் சங்கிலியில், விலை நிர்ணய வழிமுறையை வலுப்படுத்துதல், நிச்சயமற்ற தன்மையைக் குறைத்தல் மற்றும் சந்தை வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கத்திற்காக தோட்ட மற்றும் மூலப்பொருள் அமைச்சு, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயின் சராசரி விலைத் தரவு தகவலை அறிமுகப்படுத்தியதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் M-P-O-B தெரிவித்துள்ளது.
U-C-O குறிப்பு விலையைக் காட்டுவதால், தெளிவான மற்றும் நம்பகமான விலை அளவுகோலை வழங்க முடியும் என்று M-P-O-B தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் அஹமட் பர்வீஸ் குவாலாம் காடிர் Kadir கூறினார்.
அதோடு, மேலும் வெளிப்படையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய UCO விநியோகச் சங்கிலியின் வளர்ச்சிக்கும் அது ஆதரவளிக்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)