Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

திட்டமிட்டு பயணத்தை மேற்கொள்ளும் மக்கள்

20/03/2026 05:21 PM

கோலாலம்பூர், 20 மார்ச் (பெர்னாமா) -- நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, பொது மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிப்பதற்கு டி.பி.எஸ் பேருந்து முனையம், முதன்மை தளமாக இருந்து வருகிறது.

பெருநாள் தேதி உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மக்கள் தங்களது பயணத்தை நிதானமாக திட்டமிடுவதை பெர்னாமா தொலைக்காட்சி மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரியவந்தது.

ஒரு மாத நோன்பைத் தொடர்ந்து, தங்களது சொந்த ஊர்களுக்கு பயணத்தை மேற்கொள்ளும் மக்கள் தங்களது குடும்பத்துடன் பண்டிக்கையை கொண்டாட ஆர்வமாக இருப்பதாக பெர்னாமாவிடம் தெரிவித்தனர்.

''உண்மையில் வெள்ளிக்கிழமை பெருநாளாக இருக்கும் என்ற பதட்டம் இருந்தது. அரசாங்கம் விடுமுறை வழங்கியது. எனவே, இன்று மீண்டும் டிக்கெட்டிற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். எனது பேருந்து பயணம் நாளைதான். இன்றைக்கு மாற்றிவிட்டேன்,'' என்று சித்தி நூர் ஃபாத்தின் அஜிரா மொக்தார் தெரிவித்தார்.

''நான் ஒரு மாதத்திற்கு முன்னதாக டிக்கெட் வாங்கிவிட்டேன். நேற்று எனக்கு வேலை. சனிக்கிழமைதான் பெருநாளாக இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்த்தேன். வெள்ளிக்கிழமையாக இருந்தாலும் நோன்பு பெருநாள்தானே,'' என்று முஹாமட் ரசின் நாயிம் முஹாமட் ராசி கூறினார்.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் அந்நிய தொழிலாளர்கள் பெருநாள் விடுமுறையை பயன்படுத்திக் கொண்டு முன்னதாகவே, டி.பி.எஸ் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)