Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

நாட்டின் எரிசக்தி விநியோகம் சீராக இருக்கும்; அரசாங்கம் உறுதி

22/03/2026 04:41 PM

கூச்சிங், மார்ச் 22 (பெர்னாமா) -- மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்களைத் தொடர்ந்து உலக அளவில் நிச்சயமற்ற நிலை நிலவினாலும் நாட்டின் எரிசக்தி விநியோகம் சீராக இருக்கும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

ஹொர்முஸ் நீரிணை போன்ற முக்கிய வழித்தடங்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக PETROLIAM NASIONAL நிறுவனம் பெட்ரோனாஸ் ஒரு மாற்றுத் திட்டத்தை வகுத்துள்ளதாக துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.

"தற்போது மோதல் நிலவும் ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் மற்றும் எரிவாயுவை விநியோகிக்க முடியாவிட்டால், மாற்று விநியோகங்களைக் கண்டறிவதற்கான பல்வேறு திட்டங்களை பெட்ரோனாஸ் ஆராய்ந்து வருகிறது. மேலும், அவர்கள் ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய பசிபிக் நாடுகளைக் கண்காணித்து, இந்த மாற்று வழிகளுக்குத் தயாராகி வருகின்றனர். இந்தத் திட்டம் சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் எரிசக்தி விநியோகம் இன்னும் ஒரு நிலையான அளவில் உள்ளது," என்றார் அவர்.

இன்று, சரவாக் கூச்சிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டத்தோ ஸ்ரீ ஃபடில்லா அவ்வாறு கூறினார்.

மலேசியாவிற்கும் அண்டை நாடுகளுக்கும் இடையிலான எரிபொருள் விலை வேறுபாடு, கடத்தல் நடவடிக்கைகளை ஊக்குவித்து, அதன் விளைவாக நாட்டிற்கு இழப்புகளை ஏற்படுத்துவதோடு, உள்நாட்டு விநியோகத்தையும் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டில் போதுமான விநியோகத்தை உறுதி செய்வதற்கும், இத்துறையில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும், நெருக்கமான கண்காணிப்பு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சருமான ஃபடில்லா விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)