நியூ யார்க், 24 மார்ச் (பெர்னாமா) -- அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போர்ட் ஆர்தர் நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து கரும் புகை எழுந்தது.
கார் கண்ணாடிகள் அதிர்ந்திடும் அளவுக்கு ஒரு பயங்கரமான வெடிச் சத்தம் கேட்டதோடு தூர்நாற்றம் வீசியதாகவும் நேரில் பார்த்தவர்களும் அப்பகுதியில் வசிப்பவர்களும் கூறியுள்ளனர்.
வலேரோ சுத்திகரிப்பு தொழிற்சாலையில் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாக போர்ட் ஆர்தர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்த வெடிப்பு, வெப்பமூட்டும் பகுதியில் தொடர்புடையதாக இருக்கலாம் என்று Jefferson மாவட்ட அதிகாரி ஸீனா ஸ்டீபன்ஸ் கூறினார்.
அச்சம்பவத்தை தொடர்ந்து, அதிகாரிகள் அப்பகுதியில் காற்றின் தரத்தை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
போர்ட் ஆர்தர் போலீசும் தீயணைப்புத் துறையும் அருகிலுள்ள குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்துகின்றன.
ஆனால், வெளியேறுவதற்கான உத்தரவுகள் எதுவும் அங்கு பிறப்பிக்கப்படவில்லை.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]